இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானது- ஜீவன் எம்.பி கருத்து!
11 view
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையக திறப்புவிழாவில் பங்கேற்குமாறு மலையக அரசியல் கட்சிகளும், தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் எனக்கு அழைப்பு விடுத்தன. அதன் காரணமாக அந்நிகழ்வில் நான் பங்கேற்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தின் ஏனைய அரசியல் தரப்புகளுடன் புரிந்துணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படுவதற்கு நான் தயாராக உள்ளேன். அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொண்டு செல்வதுதான் நாகரிகம். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வு எமக்குள் இருக்க வேண்டும். நான் குறித்த நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் பலருக்கு பலவித வேறுபட்ட உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என்பதை நாம் மறக்கலாகாது. அதற்கான ஆரம்பமே இதுவாகும். நான் அரசியல் களத்தில் பயணிக்க…
The post இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானது- ஜீவன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானது- ஜீவன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
