இலங்கையில் ஆங்கில மொழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பு!
40 view
இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தனியார் கல்விக்கான தேவை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் கல்வி அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. உலகில் மற்ற எந்தப் பிராந்தியத்தையும் விட தெற்காசியாவில் தனியார் கல்வி வேகமாக வளர்ந்துள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. இலங்கையில், 1995 மற்றும் 2016 க்கு இடையில் தனியார் கல்விக்காக செலவிடும் குடும்பங்களின் சதவீதம் நகர்ப்புற குடும்பங்கள் மத்தியில் 41வீதத்தில் இருந்து 65 வீதமாகவும்; கிராமப்புற குடும்பங்களில் 19 வீதத்தில் இருந்து 62 வீதமாகவும் அதிகரித்துள்ளது. அறிக்கையின்படி, இலங்கையில், பட்டதாரிகளின் ஆங்கில மொழித் திறனில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்துவது, பொது நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நன்மையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில், சுமார் 71வீத பாலர் பாடசாலைகள் தனியார் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 7வீதமானவை மத நிறுவனங்களாலும், 3வீதமானவை அரச சார்பற்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அதேநேரம் 20வீதம் மட்டுமே அரச நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து…
The post இலங்கையில் ஆங்கில மொழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ஆங்கில மொழிக் கல்விக்கான தேவை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
