மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன!

35 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோயினால் 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனை சந்தித்த குழுவினர் அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர்திடீர் என இறப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன், மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் த.மனோகரன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள்,சர்வமத பேரவையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். அத்துடன் இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை…
The post மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース