பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டோருக்கு அநீதி – இழப்பீடு கோரும் தேசிய சமாதான பேரவை
6 view
ஜனாதிபதியினால் அண்மையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதிக்குரிய பொதுமன்னிப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர். இந்த குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தமது கண்பார்வையை இழந்தார். எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது மன்னிப்பின்கீழ் அவர்களை விடுவிப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தமது சம்மதத்தை வெளியிட்டார். இதன்மூலம், சித்திரவதைக்குள்ளாகி பிளவுபட்டுள்ள எமது நாட்டில் மக்கள் மீண்டெழத் தேவையான பெருந்தன்மையை முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க நிரூபித்துள்ளார் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை விட…
The post பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டோருக்கு அநீதி – இழப்பீடு கோரும் தேசிய சமாதான பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டோருக்கு அநீதி – இழப்பீடு கோரும் தேசிய சமாதான பேரவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
