மலையக அரசியற் தரப்பினர் இணைந்து செயற்படுவது நல்லது- மனோ எம்.பி அட்வைஸ்!
17 view
பொது விடயங்களில் ஒன்று சேர வேண்டும் என்ற விடயத்தில், சிங்கள அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிங்கள மக்கள், தமிழ் பேசும் அரசியல்வாதிகளை விட, தமிழ், முஸ்லிம் கட்சிகளைவிட கணிசமாக முற்போக்காக இருக்கிறார்கள். நாமும் அந்த முற்போக்கான கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும். நாட்டின் ,சமூகத்தின் இனத்தின், பொது பிரச்சினைகள், சவால்கள், இலக்குகள் தொடர்பில் மாறுபட்ட கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்வது, பேச்சுகளை நடத்துவது, முற்போக்கான கலாச்சாரம். இதுதான் பொது நோக்கில் இணைந்து செயற்படுவது என்பதாகும். “இணைந்து செயற்படுவது” என்பது எப்போதும் “தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு” என்பது மட்டும்தான் என்ற சம்பிரதாயத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். நமது கட்சிகளுக்கு வெளியே பெரும்பான்மை அரசியல்வாதிகளுடனும் பொது விடயங்களில் ஒன்றாய் அமர்ந்து உரையாட நாம் தயங்குவதில்லை. தீபாவளி தினத்தில் காலையில் எதிரணி தலைவருடனும், மாலையில் நாட்டின் ஜனாதிபதியுடனும் அமர்ந்து நமது மக்களின் விவகாரங்களை உரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருக்கு முடிகின்றது என்றால்…
The post மலையக அரசியற் தரப்பினர் இணைந்து செயற்படுவது நல்லது- மனோ எம்.பி அட்வைஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக அரசியற் தரப்பினர் இணைந்து செயற்படுவது நல்லது- மனோ எம்.பி அட்வைஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
