ஆப்கான் அணியை வென்றது இலங்கை
21 view
ரி-20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களைப்பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 28 ஓட்டங்களையும், உஸ்மான் காஹ்னி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 9 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா 42 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ராஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிற செய்திகள்
The post ஆப்கான் அணியை வென்றது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆப்கான் அணியை வென்றது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
