’துணிவு’ தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்: வைரல் புகைப்படம்
6 view
தயாரிப்பாளர் போனி கபூருடன் நடிகர் அஜித் பேசும் துணிவு படத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித், போனி கபூர் பேசிக் கொண்டிருக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
The post ’துணிவு’ தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்: வைரல் புகைப்படம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ’துணிவு’ தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்: வைரல் புகைப்படம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
