சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் – ஹரீஸ் எம்.பி!
13 view
பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த 6 அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடியுள்ளதாகவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(30) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தங்களது வேண்டுகோளில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். 11 முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில்…
The post சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் – ஹரீஸ் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் – ஹரீஸ் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
