குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

30 view
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்துள்ளது. குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர். இதனையடுத்து, இது குறித்து அறிந்த உள்ளுர் மக்கள் மற்றும் பொலிஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 132ஆக பதிவாகியுள்ளதாகவும் 177 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில்…
The post குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース