மலையக மக்கள் குறித்து ஆராய குழு நியமிக்கப்படும்- ஜனாதிபதி ரணில்!
6 view
மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாகவும், வேறு சிலர் அங்கு தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையிலான குழுவினரால் கையளிக்கப்பட்டது. அதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் இணைந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். 23 வருடங்களுக்கு முன்னர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்த மருந்துப் பொருட்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்…
The post மலையக மக்கள் குறித்து ஆராய குழு நியமிக்கப்படும்- ஜனாதிபதி ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்கள் குறித்து ஆராய குழு நியமிக்கப்படும்- ஜனாதிபதி ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
