மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்- சஜித் பிரேமதாச தெரிவிப்பு!
35 view
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனத்தின் வெளிப்படாகும். இதற்கு முற்றுபுள்ளி வைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலுயே சஜித் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவேன் என நான் கூறியபோது, அதற்கு எதிராக இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர். இந்நாட்டில் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்ககூடாது. நாம் அனைவரும் இலங்கையர்களாக பயணிக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், அதிகளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனமாகும்.…
The post மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்- சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்- சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
