சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைப்பு! (படங்கள் இணைப்பு)
12 view
உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது. ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், நேற்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியதுடன், சமூக சமையலறைக் கருத்தை அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் பரப்புவதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்தின்படி உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்காக பல் துறை கூட்டுப் பொறிமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சமூக சமையலறைத் திட்டம் தொடர்பில் சமூகத்தில் பரந்த கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது. சமூக சமையலறை கருத்தின் நோக்கம்…
The post சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
