வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா!(படங்கள் இணைப்பு)
13 view
வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா இன்று சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை வழிபாட்டுடன் தமிழர் பாரம்பரிய தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, பறை இசை, கரகம், காவடி, மயிலாட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், பொம்மலாட்டம், ஒயிலாட்டம், காத்தான் கூத்து, அரிசந்திரா பாடல், கரவலை பாடல் உட்பட பல ஆட்டங்கள் பாட்டங்களுடன் அழைத்து வரப்பட்டனர். மறைந்த எழுத்தாளர் தெணியாயன் அரங்கில் நிகழ்வுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், தலைமையில் அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றது. வரவேற்று நடனம், வரவேற்புரை தலைமை உரை, மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வட மாகாணத்தின் அதி உயர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் கருத்துரையை சொல்லருவி சிவகுமாரன், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து வடந்தை எனும் நூல் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியீட்டு…
The post வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
