சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை கெளரிசங்கரி- சிறீதரன் எம்.பி கருத்து!
6 view
மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இந்த காலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (2022.10.29) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, அமரர்.கெளரிசங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவுநிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டச் செயலாளரும், அரசியல் உயர்மட்டக் குழு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினரும், கொழும்புக் கிளையின் தலைவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பாரியார், திருமதி.கெளரிசங்கரி தவராசா கொரோனாப் பெருந்தொற்றினால் இயற்கை எய்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்த பல்வேறு குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி நீதியை நிலைநாட்டிய சட்டவல்லுனராக எல்லோராலும் அறியப்பட்ட அவரது திடீர் மறைவு தந்த பேரதிர்ச்சியிலிருந்து யாருமே இதுவரை விடுபடவில்லை. தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் எமது கட்சி மீதும்,…
The post சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை கெளரிசங்கரி- சிறீதரன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை கெளரிசங்கரி- சிறீதரன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
