தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

6 view
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டதுடன், தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரமாக இருந்ததங்கூசி வலையும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த எட்டுப்பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிற செய்திகள் சஜித் பிரேமதாச ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: குறைந்தது கோதுமை மாவின் விலை!
The post தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース