சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார் – எம்.பி உதயகுமார்!
6 view
மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார். அவரின் ஆட்சிகாலமானது மலையகத்துக்கு பொற்காலமாக அமையும்.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது. இந், நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, எதிர்க்கட்சியில், இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடிய தலைவராக சஜித் பிரேமதாச மாறியிருக்கின்றார். மக்களுக்காக நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் குரல் கொடுத்து வருகின்றார். பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அதேவேளை, தீர்வுகளுக்கான வழிகளையும் கூறி, தீர்வை…
The post சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார் – எம்.பி உதயகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார் – எம்.பி உதயகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
