தேசத்தின் விடுதலைக்காக உழைத்தவர் கௌரி சங்கரி! மாவை புகழாரம்
6 view
நீதிமன்றங்களிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி உரிய எதிர்ப்பு சட்ட நடவடிக்கைக்காவும் தேசத்தின் விடுதலைக்காகவும் உழைத்தவர்கள் வரிசையில் கௌரி சங்கரியின் பெயர் குறிப்பிட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மூத்த சட்டத்தரணி கௌரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாவை சேனாதிராஜா உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையிலே, மூத்த சட்டத்தரணி கௌரி தவராசா அவர்கள் நோயினால் மறைந்து விட்டார். அவருடைய இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் பெண்குலத்தின் தலைவியாகவும், சட்டத்துறையிலேயே மிக உயர்ந்த ஆளுமையுள்ளவராக திகழ்ந்தார். நான் அறிந்த வரையில் அவர் நீதிமன்றங்களில் வாதாடிய பின்னர் அவர் கொடுத்த வழக்குகளை பதிவு செய்து அதை தாக்கல் செய்வதிலேயே சிறந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய உழைப்பிற்காக இந்த தொழிலை செய்யவில்லை.…
The post தேசத்தின் விடுதலைக்காக உழைத்தவர் கௌரி சங்கரி! மாவை புகழாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசத்தின் விடுதலைக்காக உழைத்தவர் கௌரி சங்கரி! மாவை புகழாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
