சஜித் பிரேமதாச ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்!
28 view
மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்தவர்தான் அமரர். ரணசிங்க பிரேமதாச. அவரின் மகனான சஜித் பிரேமதாசவும் எமது மக்களின் மனங்களை அறிந்துவைத்துள்ளார். எனவே, அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிகாலத்தில்தான் ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி திறந்துவைக்கப்பட்டது. எமது மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைப்பதற்கு அவரின் பங்களிப்பு அளப்பரியது.…
The post சஜித் பிரேமதாச ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் பிரேமதாச ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
