அமெரிக்கா பறந்தார் ரஞ்ஜன்!
6 view
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டாரின் – டோஹா நோக்கி பயணித்ததாக விமான நிலைய குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டாரிலிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா நோக்கி ரஞ்ஜன் ராமநாயக்க செல்ல உள்ளார். நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தடை நீக்கப்பட்டதையடுத்தே, அவர் அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். அமெரிக்காவில் சுமார் 10 இசை நிகழ்வுகளிலும், கனடாவில் 05 இசை நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார். ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று முன்தினம் (27) இரவு அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை காரணமாக மீண்டும் விமான நிலையத்திலிருந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post அமெரிக்கா பறந்தார் ரஞ்ஜன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்கா பறந்தார் ரஞ்ஜன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
