ரி- 20 உலகக்கிண்ண தொடர்: ஒரு ஓட்டத்தினால் சிம்பாம்வே அணியிடம் தோற்றது பாகிஸ்தான்!
7 view
ரி- 20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாம்வே அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாம்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி >20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக ஷான் மசூட் அதிகப்பட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றியின் ஊடாக குழு 2 இன் புள்ளிப்பட்டியில் சிம்பாம்வே அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதோடு, பாகிஸ்தான் அணி இதுவரையில் எவ்விதமான புள்ளிகளையும் பெறாமல் 5ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post ரி- 20 உலகக்கிண்ண தொடர்: ஒரு ஓட்டத்தினால் சிம்பாம்வே அணியிடம் தோற்றது பாகிஸ்தான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரி- 20 உலகக்கிண்ண தொடர்: ஒரு ஓட்டத்தினால் சிம்பாம்வே அணியிடம் தோற்றது பாகிஸ்தான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
