இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தை ஆரம்பம்
14 view
கொழும்பு, ஒக்.17 இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது ரஷ்யாவின் பிரதியமைச்சர் அலெக்சாண்டர் நோவக்கை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போதே, இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில், ரஷ்யாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் நலன் தொடர்பில் பிரதியமைச்சர் நோவாக்குடன் அமைச்சர் பிரேமஜயந்த கலந்துரையாடியுள்ளார். இதேவேளை கோவிட்-19 தொற்று நெருக்கடியின் போது இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
The post இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
