கோதுமை மாவுக்கு நிர்ணய விலையொன்றை அறிவிக்குமாறு கோரிக்கை
7 view
கொழும்பு,ஒக் 16 கோதுமை மாவுக்கான நிர்ணய விலையொன்றை அறிவிக்குமாறு வெதுப்பக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புறக்கோட்டை மொத்த சந்தையில் 290 முதல் 295 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில், ஒரு கிலோகிராம் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லும் போது, ஒரு கிலோகிராம் கோதுமை மா 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. சிலர் கறுப்பு சந்தையில், அதிகளவில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கோதுமை மா விலை நிர்ணய விலையின்றி, விற்பனை செய்யப்படுவதால் தமது தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா நேற்று முதல் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக…
The post கோதுமை மாவுக்கு நிர்ணய விலையொன்றை அறிவிக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோதுமை மாவுக்கு நிர்ணய விலையொன்றை அறிவிக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
