பைஸன் காட்டெருமைகளை இந்தியாவிடம் கோரும் இலங்கை!
30 view
17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலப்பகுதியுடன் இலங்கையிலிருந்து முற்றாக அழிந்துபோன கௌர்ஸ் (Gaurs) அல்லது இந்தியன் பைஸன்களை (ஒரு வகை காட்டெருமை) ஏற்றுமதி செய்து இலங்கையில் அதன் பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இந்தியாவின் தி இந்து செய்திவெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இதுபோன்ற முதல் ஒப்பந்தம் இதுவாக அமையும். மேலும் “வனவிலங்கு அல்லது விலங்கியல் இராஜதந்திரம்”என்ற உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதம் கோரிக்கையைப் பெற்ற இந்திய வெளியுறவு அமைச்சு (MEA), ஒரு காளை உட்பட குறைந்தது ஆறு மாதிரிகளை கொண்டு செல்வதற்கான திட்டம் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சிடம் (MoEF) ஆலோசனை கோரியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை விலங்கியல் திணைக்களத்தின் முன்மொழிவின்படி, [சர்வதேச ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட] வழிகாட்டுதல்களுக்கு இணங்க மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஐந்து வருட…
The post பைஸன் காட்டெருமைகளை இந்தியாவிடம் கோரும் இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பைஸன் காட்டெருமைகளை இந்தியாவிடம் கோரும் இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
