வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை வடக்கு கிழக்கிற்கு பொருத்தமற்றது – கலையரசன் தெரிவிப்பு!
6 view
மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே ஒரு பாடசாலையின் வளங்கள் நிர்ணயிக்கப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணத்திலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொருத்த மட்டில் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிரழிந்த சமூகம், தமிழர்களின் பிறப்பு வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது எனவே இப்பிரதேசங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பாடசாலையின் வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை பொருத்தமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். திருக்கோவில் கனகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திருக்கோவில் பிரதேசத்திலே பல கிராமங்கள் இன்னும் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக கனகர் கிராம மக்களுக்கான காணிப் பத்திரங்கள் இன்மை என்பது பாரிய பிரச்சனையாகக் குறிப்பிடப்படுகின்றது. அக்காலத்தில் 63 குடும்பங்களுக்குரிய பணங்கள் செலுத்தப்பட்டும் வீடமைப்பு அதிகரசபையினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்கின்ற விடயமும், இத்தோடு…
The post வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை வடக்கு கிழக்கிற்கு பொருத்தமற்றது – கலையரசன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை வடக்கு கிழக்கிற்கு பொருத்தமற்றது – கலையரசன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
