வரி திருத்தச் சட்டமூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்- கணேசமூர்த்தி தகவல்!

13 view
வரிக் கொள்கையின் முக்கியமானது அறவிடப்படும் வரி நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் காணப்படவேண்டும். அவை பொது மக்களால் செலுத்தப்படக்கூடியதாகவும் காணப்பட வேண்டும். இருப்பினும், நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் வரிக் கட்டமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்து, வரி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் தொழில் செய்யும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனூடாக மேலும் நாட்டில் வறுமை நிலை ஏற்பட்டு எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக, அரசாங்கத்துக்கு வரி வருவாயை திரட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரி விடுப்புகள், வரிச் சலுகைகள் அரசாங்கத்தின் வரி வருவாய்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பை ஈடு செய்ய அரசாங்கத்துக்கு வரி வருவாயை அதிகரிக்க…
The post வரி திருத்தச் சட்டமூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்- கணேசமூர்த்தி தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース