யாழ்.நகரில் புதிய கட்டடம் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு !
31 view
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சிவன் – அம்மன் வீதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும், அன்னலிங்கம் கிரிசாந் (வயது 35) இளைஞனே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புதிதாக கட்டப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் வேலை செய்யும் குழு ஒன்று நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். மது அருந்திய பின்னர் மது போதையில் விடுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி , விடுதி பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி தாம் வேலை செய்யும் புதிய கட்டடத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில்…
The post யாழ்.நகரில் புதிய கட்டடம் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.நகரில் புதிய கட்டடம் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
