ன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான்
45 view
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச்சுடன் கதைத்து விவசாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,பொருளாதார பாதிப்பால் எமது பகுதி மக்கள் பாதிப்படைந்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் விவசாய மக்களை ஊக்கப்படுத்தும் முகமாக 12 மாவட்ட மக்களுக்கும் உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு விதை தானியங்கள் வழங்கப்படுகின்றது. அதில் வன்னி மாவட்ட அமைச்சர் என்ற வகையில் அதிகமாக 9 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் நிதி உதவிகளை கேட்டிருக்கின்றோம். கிடைக்கும் பட்சத்தில் அதனை வழங்குவதாக இருக்கின்றோம். சிறிய உதவியாக இருப்பினும் குறித்த…
The post ன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ன இலாகாக்குரிய காணிகளிலும் விவசாயம் செய்ய நடவடிக்கை – மஸ்தான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
