கோவிந்தன் கருணாகரம் பிணையில் விடுதலை!
36 view
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டித்ததாக கூறி கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 10ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆஜராகிய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேசும் நீதிமன்றில் இன்று ஆஜரான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவு நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றிருந்தாகவும் அதனை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் மீறியுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் அது தொடர்பில் பிடியாணையினையும் கொக்கட்டிச்சோலை பொலிஸார்…
The post கோவிந்தன் கருணாகரம் பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோவிந்தன் கருணாகரம் பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
