மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
6 view
நீர்கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் சிறுவர் தினமன்று மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. சிறுவர் தினமன்று ஆடிப்பாடி மகிழ்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் தேசிய சிறுவர் தின நிகழ்வின் பெண் ஆசிரியர்கள் மாணவியருடன் இணைந்து நடமானடியிருந்தனர். இவ்வாறு நடனமாடிய ஆசிரியைகளுக்கு எதிராக மேல் மாகாண கல்வி திணைக்களம் ஒழுக்காற்று விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. எனினும், இந்த ஒழுக்காற்று விசாரணை தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொருத்தமற்ற பாடலுக்கு ஆசிரியைகள் நடனமாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 1940களில் வெளியான திரைப்படமொன்றின் பாடல் ஒன்றுக்கு ஆசிரியைகள் நடனமாடியிருந்தனர். பாடசாலையில் ஆசிரியைகள் நடனமாடுவது தவறு என எவரும்கூற முடியாது,…
The post மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
