நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே – உதயச்சந்திரா

6 view
நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே.நாங்கள் கையில் ஒப்படைத்த,வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் பணமும் மரண சான்றிதழ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 லட்சம் தருவதாக கூறுகின்றனர்.நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எமது பிள்ளைகள்,உறவுகள் காணாமல் போனதற்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி. ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும் நீதியை பெற்றுத்தரவதற்காகவும் அவர்கள் செயல்படவில்லை. அவர்கள் தமது அரசினையும்,தனது மகளையும் இராணுவத்தையும் பாதுகாப்பதற்காகவும் பயங்கரவாதத்தை ஆதரித்து போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களையே…
The post நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே – உதயச்சந்திரா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース