இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம்
32 view
அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது. அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன் 14’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இந்த மேம்படுத்தப்பட்ட ஐபோன் 14 வகையை இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அப்பிளின் பெரும்பாலான ஐ-போன்களை உற்பத்தி செய்யும் தைவானைத் தளமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது, இந்நிலையிலேயே தனது உற்பத்தியை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு நிலவரப்படி,…
The post இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
