குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி

10 view
சிறு குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முற்பகல் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியாக அவர்களின் முழு வளர்ச்சியை உறுதிசெய்யவும் சுரண்டல் மற்றும் பாகுபாடுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சிறுவர்களை பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவதில் இருந்து சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். பெற்றோரிடமிருந்து பிரிந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவில்…
The post குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース