தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா!
41 view
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, 100 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அத்துடன் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான 4 புள்ளிகளை இந்தியா பெற்றதுடன், தென் ஆபிரிக்காவுக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
