கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன்
43 view
விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் ஹிந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் அணித்தலைவர் மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதையை சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். அவுஸ்ரேலியா சென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார். நடராஜன் ஆட்டத்தை ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். எனவே அவரது வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா…
The post கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
