கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்!
36 view
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கொப்பம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கலாபுர்கி, யாத்புரி, கொப்பல், குடகு, வல்லாரி, சித்ரதுர்கா, சிக்கமங்களூரு, சிக்கபள்ளாபூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், பெருக்கெடுத்த வெள்ளம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. சுமார் 4 அடிக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன. பருவம் கடந்து பெய்து வரும் மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுவட்டார விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
The post கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
