நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு, பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும்–ஜனாதிபதி தெரிவிப்பு!
32 view
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிலும் தங்கியிருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும்போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனைச் சரிசெய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையிடுவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்குக் கூடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ‘எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது’ என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த…
The post நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு, பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும்–ஜனாதிபதி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு, பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும்–ஜனாதிபதி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
