உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது: அமெரிக்கா
37 view
அமெரிக்கா,ஒக் 11 கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புடின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் வலுப்படுத்துகின்றன. எங்களது நண்பர்கள் மற்றும்…
The post உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது: அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது: அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
