வடக்கில் பாரம்பரிய கலைஞர்களுக்கும்,கலைகளுக்கும் இனி முன்னுரிமை – பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு
34 view
வடக்கில் பாரம்பரிய கலைஞர்களுக்கும்,கலைகளுக்கும் இனி முன்னுரிமை அதிமாக வழங்கப்படும் என வட மாகண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: கலைஞர்களையும் திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதுதான் எமது நோக்கம்.இதற்காகவே 34 பிரதேச செயலகங்களில் கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளனர்.அதே போன்று 5 மாவட்டச் செயலகங்களிலும் அதிகாரிகள் உள்ளனர்.இது கலைஞர்களுக்கு சொந்தமான திணைக்களம்.அதனை முழுமையாக பயன்படுத்தி ,கலைஞர்கள் தமது அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். கலைகளின் ஊடாக மக்களின் மனதை மாற்ற முடியும்.ஆகவே மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் கலைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.அப்போது தான் சிறந்த தலைமைத்துவம் வளரும்.அதே போன்று கலைஞர்களை கௌரவிக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இளம் கலைஞர் விருது,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலைகுரு விருது ஆகியன வழங்கப்படுகிறது.மற்றும் சிறப்பான பயிற்சிகள் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.எதிர்வரும் 14 ஆம் திகதி…
The post வடக்கில் பாரம்பரிய கலைஞர்களுக்கும்,கலைகளுக்கும் இனி முன்னுரிமை – பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் பாரம்பரிய கலைஞர்களுக்கும்,கலைகளுக்கும் இனி முன்னுரிமை – பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
