போதைப்பொருள் கடத்தல்காரரை நாடு கடத்துவது தொடர்பான அறிவித்தல்!
47 view
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என்று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கொழும்பில் உள்ள தேசிய மத்திய பணியகத்தினால் (இலங்கை இன்டர்போல்) 2022 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி விடுத்த சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பை அடுத்து குறித்த நபரை நாடுகடத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதியிடப்பட்ட INT 281/21 என்ற இலக்கமுடைய கடிதமூலம் (பிப 3.00 மணியளவில்)…
The post போதைப்பொருள் கடத்தல்காரரை நாடு கடத்துவது தொடர்பான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் கடத்தல்காரரை நாடு கடத்துவது தொடர்பான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
