வவுனியா மோட்டார் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இன்மையால் மக்கள் சிரமம்!

39 view
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இல்லாமையால் பொதுமக்கள் பெரும் அசளகரியங்களுக்க முகம்கொடுத்து வருகின்றனர். சாரதி அனுமதி பத்திரம் புதுப்பித்தல் உட்பட இன்னோரன்ன தேவைகளுக்காக மோட்டார் திணைக்களத்தின் நீட்டும் பொதுமக்களின சிங்களத்தில் இங்குள்ள அதிகாரிகள் உரையாடுவதால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்து வருவதுடன் தமது தேவையை நிறைவேற்ற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர். கடும் வெயில் நேரங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படிவங்களை உரிய அதிகாரியிடம் வழங்கிய போதிலும் மேலதிகாரி கையோப்பமிட்டு வழங்குவதற்கு பல மணிநேரமாகுவதாகவும் பயன்பெற வந்தோர் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அவர்களும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
The post வவுனியா மோட்டார் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இன்மையால் மக்கள் சிரமம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース