படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி
46 view
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப்ஹாப் ஆதி தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வீரன் என பெயர் இடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க இணை தயாரிப்பை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் செய்துள்ளனர்.
The post படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
