நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள 25அடி உயரமான முருகன் சிலை!
17 view
பீதுரு தாலகால மலை அடிவாரத்தில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 25 அடி உயரமான முருகன் சிலை உடனான ஆலயத்திற்கான அடிக்கல் இன்று(11) காலை நாட்டப்பட்டது. இதற்கான அடிக்கல்லை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், லண்டன் சற்குரு சரவணபாபா சுவாமிகளின் பக்தர் நிமலன் அவருடைய தாயார் திருமதி சண்முகநாதன் , மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம், கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ, தோட்ட உதவி முகாமையளார் ஜமுதித , யட்டியாந்தோட்டை ஜெகநாதன், கோட்லோஜ் அம்மன் ஆலயத்தின் தலைவர் சிறிகாந்த் ஆகியோர் இணைந்து நாட்டி வைத்தனர். இங்கு அமையப்பெறவுள்ள 25 அடி முருகன் சிலையை ரட்ணபுரியை சேர்ந்த பிரபல சிற்பி சிவகுமாரன் வடிவமைக்கவுள்ளார். இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வை தொடர்ந்து கோட்லோஜ் அம்மன் ஆலயத்தில் சற்குரு சரவணபாபா சுவாமிகளின் ஜனன தினத்தை முன்னிட்டும் இலங்கை திருநாட்டிற்கு ஆசி வேண்டியும் விசேட யாக பூஜை ஒன்றும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து…
The post நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள 25அடி உயரமான முருகன் சிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள 25அடி உயரமான முருகன் சிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
