மழைக்கு முன்னரே பழுதடைந்த பாடசாலை கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
26 view
பருவமழைக் காலம் தொடங்குவதற்குள், தமிழகம் முழுவதும் பழுதடைந்த பாடசாலை கட்டடங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். நடுநிலை பாடசாலை தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பதவி உயா்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கும் முன்னரே இடியும் நிலையில் உள்ள பாடசாலை கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
The post மழைக்கு முன்னரே பழுதடைந்த பாடசாலை கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மழைக்கு முன்னரே பழுதடைந்த பாடசாலை கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
