தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்குவோம்! – அரசுக்கு சஜித் எச்சரிக்கை
18 view
“இந்த முட்டாள்தனமான அரசு நாட்டை அழித்து வருகின்றது. இந்த அரசு தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகின்றது. தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கின்றது. தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். “அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைகின்றது. காலிமுகத்திடல் வளாகத்தில் அமைதியான…
The post தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்குவோம்! – அரசுக்கு சஜித் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்குவோம்! – அரசுக்கு சஜித் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
