அவசர நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ஆலோசனைப் பட்டறை

17 view
(அஸ்லம் எஸ்.மௌலானா) உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.- LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஆலோசனைப் பட்டறையொன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (10) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் மற்றும் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இப்பட்டறையில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.பி.மௌலானா, என்.எம்.சாஹிர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். இப்பட்டறையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.செலஸ்டினா, சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், சுபைல் அஸீஸ், ஏ.எம்.சித்தி நஸ்ரின் மற்றும் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்களுடன் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்கள், இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியக் காரியாலயம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சில முக்கிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.…
The post அவசர நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ஆலோசனைப் பட்டறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース