போதைப்பொருள் கடத்தலின் பின்னணி தொடர்பில் கேள்வியெழுப்பிய சுரேஸ்!
7 view
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பாதுகாப்புத்துறையினராலும் பொலிசாரினாலும் அவர்களது புலனாய்வுப் பிரிவினராலும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தடையின்றி இடம்பெறுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். போதைவஸ்துக் கடத்தலைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மக்கள் பாரிய அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கையில் இத்தகைய கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களினால் அப்பாவி மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது. இத்தகையோரின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஒரு பக்கத்தில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இருக்கின்ற அதேசமயம், போதைவஸ்தின் பாவனை என்பது நாட்டிற்குள் மிக அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் யுவதிகளும் போதைவஸ்துக்கு அடிமையாவதாக வைத்தியர்களாலும், சமூகநலன் விரும்பிகளாலும் இன்னும் பல தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. கடல் மற்றும் விமான மார்க்கமாக இந்தப் பொருட்கள் நாட்டிற்குள் வந்துசேர்கின்றன. உலக நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட…
The post போதைப்பொருள் கடத்தலின் பின்னணி தொடர்பில் கேள்வியெழுப்பிய சுரேஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் கடத்தலின் பின்னணி தொடர்பில் கேள்வியெழுப்பிய சுரேஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
