சர்வதேசத்தைப் பகைத்தால் நாடு மீண்டெழவே முடியாது-அரசிடம் மைத்திரி இடித்துரைப்பு!
29 view
“சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஒருபோதும் மீண்டெழ முடியாது. ஆகவே, வெளிவிவகாரக் கொள்கையைத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஊழல், மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு இலங்கையைச் சர்வதேச நாடுகள் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும், நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். நல்லாட்சி அரசு…
The post சர்வதேசத்தைப் பகைத்தால் நாடு மீண்டெழவே முடியாது-அரசிடம் மைத்திரி இடித்துரைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேசத்தைப் பகைத்தால் நாடு மீண்டெழவே முடியாது-அரசிடம் மைத்திரி இடித்துரைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
