யாழ். மாநகர சபை தொடர்பில் பரப்பட்டுவரும் தவறான செய்திகள்! – முதல்வர் விளக்கம்
7 view
யாழ். மாநகர சபையின் கடந்த மாத கூட்டம் தொடர்பாக சில தவறான செய்திகள் ஊடகங்களிலே பரப்பட்டு வருகின்றன என யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் செப்டம்பர் 27 ஆம் திகதி கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினைத் தவிர பங்குபற்றிய அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்திருந்தனர். இதற்கு சொன்ன காரணம் என்னவெனில் யாழ்.மாநகர ஆணையாளரால், மாநகர சபைக்குத் தெரியாமல் யப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட இருந்த 4 குப்பை அகற்றுகின்ற வாகனங்களை தருவதற்கான செயற்திட்டத்தினை இரத்து செய்வதற்காக இணங்குவதாக அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலே கருத்துக்களை முன்வைத்து வைத்திருந்தனர். அதாவது மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் சபைக்குத் தெரிவிக்கவில்லை என்ற விடயத்தை எழுப்பி நாங்கள் மன்னிப்பு கூற வேண்டும் என கூறியிருந்தார்கள். இந்த யாப்பான் வாகனம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவிலே இருந்த முன்னைய முதல்வரால் கொண்டுவர…
The post யாழ். மாநகர சபை தொடர்பில் பரப்பட்டுவரும் தவறான செய்திகள்! – முதல்வர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாநகர சபை தொடர்பில் பரப்பட்டுவரும் தவறான செய்திகள்! – முதல்வர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
