தவறான முடிவுகளுக்கு தூண்டப்படும் மாணவர்கள்! உளவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்
15 view
இலங்கையில் 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோர் எதிர்காலத்தில் தற்கொலையில் ஈடுபடும் நிலை ஒன்று உருவாகிக்கொண்டு இருப்பதாக சிறுவர் உளவியல் ஆலோசகர் சந்திரா ஜி கிரின்கொட அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டும் ஒரு கும்பல் நாடளாவிய ரீதியிலும் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது வரை பலரையும் இரையாக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கையடக்கத் தொலைப்பேசியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் இந்த நிலை உருவாகியுள்ளது. கேம்கள் (Game)மற்றும் பிழையான தொடர்புகள் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கையடக்கத் தொலைப்பேசிக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 15 சிறுவர்கள் சிகிச்சைக்காக என்னை தொடர்பு கொள்கின்றார்கள். சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதான சிறுவன் ஒருவன்…
The post தவறான முடிவுகளுக்கு தூண்டப்படும் மாணவர்கள்! உளவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தவறான முடிவுகளுக்கு தூண்டப்படும் மாணவர்கள்! உளவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
