வடகிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் 70வது நாள் கவனயீர்ப்பு!
42 view
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முழங்காவில் கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 70ம் நாள் போராட்டத்தில் முழங்காவில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம்…
The post வடகிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் 70வது நாள் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் 70வது நாள் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
